நாசரேத், ஜன. 30:
பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளிகளில் ஆங்கில வழி தொடக்க கல்வி மாணவ, மாணவிகளுக்கான புதிய அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் சுப்பு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செந்தூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளி சார்பில் ஏழை மாணவர்கள் 5 பேருக்கு கல்வி செலவாக தலா ரூ.2 ஆயிரத்தை வழங்கினார்.

இதில் துணை தலைமையாசிரியர் சுரேஷ் காமராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணை தலைமையாசிரியர் ஜெசுதாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொருளாளர் ஜெகன்மோகன் செய்திருந்தார்.