ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ அனைத்து பணியாளர் நலச்சங்கம் கலெக்டரிடம் மனு

0
22
dcw

ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ அனைத்து பணியாளர் நலச்சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :

ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ அனைத்து பணியாளர் நலச்சங்க செயலாளர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: எங்கள் பணியாளர் நலச்சங்கமானது கடந்த 1962ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தொழிற்சங்க சட்டத்தின் கீழ் கடந்த 31.7.2017அன்று பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்பட்டு வரும் எங்களது தொழிற்சங்கத்தில், கடந்த 2020ம் ஆண்டு 355பேர் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், எங்களது நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவராக பொறுப்பேற்றுள்ள சீனிவாசன் என்பவர் சங்கத்தை கலைத்திடும் வேண்டும் என்று எங்களை வலியுறுத்தி மிரட்டல் விடுத்து வருகிறார்.

இவரது மிரட்டல்களால் எங்கள் சங்கத்தில் தற்போது 11பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அதோடு சங்கத்தை கலைக்காத நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கத்தில் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் செயல்பட்டு வருகிறார். எனவே இவர் மீதும் இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, பழிவாங்கும் போக்கில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை உடனடியாக பணியில் அமர்த்திடவும் வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here