பிப்ரவரி முதல் வேலைவாய்ப்பு அலுவலகம் கோரம்பள்ளத்தில் இயங்கி வருகிறது – உதவி இயக்குநர் அறிக்கை

0
62
thoothukudi emplayment office

தூத்துக்குடி, பிப்.2:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கடந்த மாதம் 22ம் தேதி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த மாதம் முதல் தேதியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோரம்பள்ளத்திலுள்ள புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது.

எனவே, பதிவு, புதுப்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக விரும்பும் மனுதாரர்கள் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628 101 என்ற முகவரியை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அணுகலாம் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here