நெல்லை – நாசரேத் இடையே இரவு நேர கடைசி பேரூந்துகள் நிறுத்தம்! – வியாபாரிகள் சங்கம் கண்டனம்!!

0
38
nazareth news

நாசரேத்,பிப்.14:

நெல்லையில் இருந்து நாசரேத்திற்கு இரவு நேரத்தில் வரும் கடைசி பேரூந் துகள் நிறுத்தப்பட்டதற்கு நாச ரேத் நகர வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச் செய லாளர் இராவி அசுபதி சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து திசையன்விளைக்கு நாசரேத் வழியாக இரவு 9:30 மணிக்கு தடம் எண் 263 எக்ஸ் பேரூந்தும், இரவு 10:25 மணிக்கு உடன்குடிக்கு தடம் எண் 131 ஏ பேரூந்தும் இயக்கப் பட்டு வந்தது. ஆனால் இந்த 2 பேரூந்துகளும் எவ்வித முன் அறி விப்பும் இல்லாமல் ரத்து செய்யப் பட்டு விட்டது.

இதனால் மதுரை, திருநெல் வேலி, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து கொள் முதல் செய்து விட்டு நாசரேத், சாத்தான் குளம், உடன்குடி, மெஞ்ஞானபுரம் ஊர் திரும்பும் வியாபாரிகள் 2 பேரூந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டதால் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேர கடைசி 2 பேரூந்துகளையும் இயக்க ஆவண செய்ய வேண்டு கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here