தூத்துக்குடியில் பிப் 22ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – கீதாஜீவன் அறிக்கை

0
85
dmk news

தூத்துக்குடி,பிப்.19:

தூத்துக்குடியில் பிப் 22ம் தேதி திமுக சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என எம்.எல்.ஏவும் வடக்குமாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

’’மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயா்த்தியுள்ளது. அதே போல இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டா் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயா்த்தியுள்ளார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயா்ந்து ஏழை-எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தாறுமாறாக உயா்த்திய மத்திய பா.ஜ.க அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், இந்த விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் தி.மு.கழகம் சார்பில் வருகிற 22.02.2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆா்பாட்டங்கள் நடைபெறும் என தி.மு.கழக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள்.

அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 22.02.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி – பாளைரோடு சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் மாவட்ட பொறுப்பாளராகிய என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் மற்றும் வார்டு, கிளைக் கழக செயலாளா்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, மாணவரணி, தொண்டரணி, மீனவரணி, இலக்கிய அணி, வழக்கறிஞா் அணி,

விவசாய அணி, விவசாய தொழிலாளா் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, சிறுபான்மை அணி, வா்த்தகா் அணி, பொறியாளர் அணி, நெசவாளா் அணி, தகவல்தொழில் நுட்ப அணி, மருத்துவரணி, ஆதிதிராவிடர்நலஅணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here