பாஜக, நாம் தமிழர் கட்சி போல் தமிழகத்தில் தனித்து போட்டியிடுமா? – தூத்துக்குடியில் சீமான் கேள்வி

0
53
seeman news

தூத்துக்குடி,பிப்.20:

பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சியினைபோல் தமிழகத்தில் தனித்து போட்டியிடுமா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், ’’பாரதிய ஜனதா கட்சியானது தென்பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை கைப்பற்ற குறிவைத்து வருகின்றது அதில் முதலில் புதுச்சேரியை கைப்பற்ற நினைக்கின்றது. இதற்காகவே மோடி அடிக்கடி தமிழகம் வருகின்றார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிரண்பேடியை வைத்து இதுவரை செயல்படவிடாமல் தடுத்து வந்தனர். இப்போது கிரண்பேடியை மாற்றி தமிழிசை செளந்தரராஜனை கொண்டு வந்து எப்படியாவது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க நினைக்கின்றது.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது கட்சிதான் வெவ்வேறு. ஆனால் கொள்கை ஒன்றுதான் கட்சி கொள்கை,வெளியுறவு கொள்கை, பொருளாதர கொள்கை,பாதுகாப்பு கொள்கை எல்லாவற்றிலும் இரண்டு கட்சியும் ஒன்றுதான் காங்கிரஸ் சாப்ட் இந்துத்வா, பாரதிய ஜனதா சவுண்ட் இந்துஸ்வா அவ்வளவுதான் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

மேலும் இந்தியாவை ஆளக்கூடிய பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியானது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைபோல் தனித்து போட்டியிடுமா? வேண்டுமானால் திராவிட கட்சிகள் தோளில் ஏறிக்கொண்டு வலம் வரும் அதான் நடக்கும்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் அதைபோல் கலவரத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் எனவே அதனை தமிழக முதல்வர் வாபஸ் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றேன்’’ என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here