மாநாடு போல்.. தூத்துக்குடியில் அஇசமக-வின் 6வது பொதுக்குழு கூட்டம்..

0
40
sa ma ka sarathkumar

தூத்துக்குடி,மார்ச்.03:

தூத்துக்குடியில் அஇசமகவின் 6வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பெரிய மாநாடு போல் காட்சியளிக்கிறது பொதுக்குழு கூட்டம்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தூத்துக்குடி அருகே தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திரவியபுரத்தில் சமத்துவம் மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கு தலைவர் சரத்குமார் தலைமை வகிக்கிறார். தலைமைநிலைய செயலாளரும், மகளிரன்பி துணை செயலாளருமான பாகீரதி வரவேற்றார். துணைப்பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகிக்கிறார். மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகாசரத்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கி வருகின்றனர்.

முன்னதாக மீண்டும் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் மாநில முதன்மை துணை பொதுச்செயலாளராக ராதிகாசரத்குமார். தொடர்ந்து ஏற்கனவே பொறுப்புக்களில் இருந்த நிர்வாகிகள், ஏற்கனவே பொறுப்பு வகித்த நிர்வாகிகளாகவே பொறுப்பேற்றனர். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here