ஆழ்வார்திருநகரி அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு – ஒருவர் கைது

0
124
river

தூத்துக்குடி, மார்ச் 4:

ஆழ்வார்திருநகரி அருகே தொட்டியன் குடியிருப்பு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொட்டியன் குடியிருப்பு செல்வநகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சொக்கலிங்கம் என்ற லிங்கம் (35) என்பவர் இன்று (04.03.2021) காலை 407 டிப்பர் லாரி மூலம் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து மாவடிபண்ணை கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜுடி வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கம் என்ற லிங்கத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ½ ஆற்று மணலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here