அ.ம.மு.க விலிருந்து 30 பேர் அ.தி.மு.க வில் ஐக்கியம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் !

1
83
admk

இப்போதெல்லாம் அ.ம.மு.க விலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி அவ்வப்போது நடந்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடுவில் கூட அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட வசவப்பபுரம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 30 பேர் இன்று(01.01.2020) அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்தனர். வசப்பபுரம் அமமுக ஊராட்சி கழக செயலாளர் ஏ.எஸ்.எம். அப்பாத்துரை தலைமையில் கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் முன்னிலையில் அவர்கள் அணிவகித்தனர்.

அமைச்சர் தனது இல்லத்தில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். அதில் கலந்து கொண்ட இவர்கள், அமைச்சர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர், அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் கட்சியில் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அப்பாத்துரையிடம் பேசினோம், ‘’அ.தி.மு.கவில் எங்க அப்பா ஏ எஸ் மணியன் கருங்குளம் ஒன்றிய துணைசெயலாளராக இருந்தவர். நானும் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தேன். இடையில் அமமுகவில் சேர்ந்தேன். ஆனால் அந்த கட்சி எனக்கு பிடிக்கவில்லை. அ.தி.மு.கதான் அனைத்து சமூதாயத்தவரும் சேர்ந்து இருக்கிற கட்சியாக இருக்கிறது.

அ.ம.மு.க அப்படியில்லை. அதனால் அதிமுகவுக்கே மீண்டும் திரும்பி சென்றுவிட்டேன். எங்களை அமைச்சர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். நாங்களும் அதிமுகவில் இருப்பதையே மகிழ்ச்சியாக கருதுகிறோம். இப்போது முப்பது பேர் மட்டும் சென்றிருக்கிறோம். விரைவில் நிறைய பேர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கும்’’ என்றார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here