வருடம் தோறும் 25 ஏழை மாணவர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பை பெற்று தருவேன் – ஊர்வசி அமிர்தராஜ் உறுதி

0
215
congress

சாத்தான்குளம், மார்ச் 25:

ஆண்டுக்கு 25 ஏழை மாணவர்களை கல்வி பயில வைத்து வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என சாத்தான்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 2வது நாளாக நேற்று திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் சாத்தான்குளம் ஒன்றியம் ராஜமன்னார்புரத்தில் பிரச்சாரத்தைதொடங்கினார். தொடர்ந்து அவர் சுப்பிரமணியபுரம், பொத்தகாலன்விளை, முதலூர், கடாட்சபுரம், சொக்கலிங்கபுரம், நரையன்குடியிருப்பு, அடைக்கலாபுரம், பள்ளக்குறிச்சி, சுண்டங்கோட்டை, பிச்சிவிளை, அழகபப்புரம், சித்தன்குடியிருப்பு , படுக்கப்பத்து, காந்திநகர், உசரத்துக்குடியிருப்பு, சொக்கன்குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை. தட்டார்மடம் ,போலையர்புரம், நடுவக்குறிச்சி, பிரகாசபுரம், தாமரை மொழி, பூவுடையார்புரம் ஆகிய பகுதியில் திறந்த ஜீப்பில் நின்று கை சின்னத்துக்கு வாக்களித்து தனக்கு ஆதரவு தருமாறு வேண்டினார். அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்ததும், ராகுல்காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் ஆதரவுடன் உங்கள் பகுதி குறைகளை உங்களுடன் ஒருங்கிணைந்து செய்து கொடுப்பேன், தற்போது தமிழகத்தில் உள்ள ஆட்சி மத்திய அரசின் பினாமி ஆட்சியாகவே இருந்துள்ளது. சாத்தான்குளம் பகுதியில் ஆண்டுககு 25 மாணவர்களை எனது சொந்த செலவில் படிக்க வைத்து அவர்களுககு வேலை வாயப்பை உருவாக்கி கொடுப்பேன். ஆதலால் தமிழகத்தில் விடியலலை கொண்டு வரும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர எனக்கு கை சின்னத்தில் ஆதரவு தாருங்கள்’’ என்றார்.

அப்போது அவருடன் மாநில வழக்குரைஞர் பிரிவு இணைத் தலைவர் மகேந்திரன், வட்டாரத் தலைவர் லூர்துமணி, சக்திவேல்முருகன், பிச்சிவிளை சுதாகர், பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் சங்கர், நகர தலைவர் வேணுகோபால், மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நகர மகளிரணி தலைவர் புளோராராணி, மேற்கு ஒன்றிய மகளிரணி தலைவி பாலா, முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் ஜாக்குலின், மாவட்ட பிரதிநிதி யோகபாண்டி, நகர துணைத் தலைவர் கதிர்வேல், ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப், பாலமுருகன், மாநில பொதுக¢குழு உறுப்பினர் இந்திரகாசி, ஊராட்சி செயலாளர் ராஜபாண்டி,மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, நகர செயலாளர் இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், செந்தில்குமார், ஒன்றிய மதிமுக செயலாளர் பலவேசபாண்டியன், மாவட்ட கலை பிரிவு துணை செயலாளர் மகாராசன், ஒன்றிய மனித நேய கட்சி செயலாளர் தௌபீக், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here