ஹெல்மெட் அணிந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும்போது உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி

0
23
spnews
 தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில்   மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 இன்று (16.07.2019) மதியம் 02.30 மணியளவில் தூய மரியன்னை கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. 
இந்தக்கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், ‘’அனைவரும் சாலை விதிகளை அறிந்து, அவற்றை மதித்து விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.  அதே போன்று பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும்போது உயிரிழப்புகளை தவிர்க்கலாம். 
 
ஒரு நபர் விபத்தில் உயிரிழக்கும்போது, அவர் மட்டுமல்லாமல் அந்தக் குடும்பமே பெரிய பாதிப்பிற்குள்ளாகிறது, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.  சீட் பெல்ட் அணிந்தால்தான் விபத்து நேரத்தில் வாகனத்தில் ஏர் பலூன் வெளிப்பட்டு உயிரிழப்பை தவிர்க்கும்.  18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த வாகனங்களும் ஓட்டக்கூடாது.

 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் லைசென்ஸ் பெற்ற பிறகே ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து செல்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் அருகில் உள்ளவர்கள் அனைவருக்கும் நீங்கள் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் எஸ்.பி. 

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சகோதரி லூசியா ரோஸ் மற்றும் துணை முதல்வர் முனைவர் சகோதரி ஷிபானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சாலை போக்குவரத்து தலைமை காப்பாளர் ஜட்சன் சாலை பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் தூய மரியன்னை கல்லூரியின் சுமார் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர்  பார்த்திபன், உதவி ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here