”ஆண்டுக்கு 100 ஏழை,எளிய மாணவ,மாணவியரை எனது சொந்த செலவில் படிக்க வைப்பேன்” – எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வாக்குறுதி

0
40
sdr news

தூத்துக்குடி,.ஏப்ரல்.03:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் இன்று அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தூத்துக்குடி அனல்மின் நிலைய பிரதான நுழைவுவாயில் பகுதியில் நின்று அனல்மின் நிலைய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அதனைத்தொடர்ந்து தொகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ’’தூத்துக்குடி தொகுதியில் தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றிடுவேன். தொகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் துரிதமாக செய்து கொடுத்திடுவேன்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் ஆண்டுக்கு 100 ஏழை எளிய மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து அவர்களை எனது சொந்த செலவிலேயே படிக்க வைப்பேன். தொகுதி மக்களை எதிர்பாராமல் ஏற்படும் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை காலங்களில் அவர்களது உயிரினை பாதுகாத்திடும்பொருட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை செய்து கொடுத்திடுவேன்.

மாவட்டத்தில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து அவர்களது திறனை மேம்படுத்திட சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுபோன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திடவும், தலைவர் ஜி.கே.வாசனின் கொள்கையான வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதை மெய்பித்திடவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திடவேண்டும். அதற்கு வாக்காளர்களான நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தந்திடவேண்டும் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர்தகணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி, மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், வழக்கறிஞர் அணி ராஜாராம், முன்னாள் நகர அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், வட்ட செயலாளர் ஹார்பர்பாண்டி, மின்வாரிய அண்ணா தொழிற்சங்க நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தூத்துக்குடி அனல்மின் நிலைய திட்ட செயலாளர் அய்யாச்சாமி, திட்ட தலைவர் சுருளிச்சாமி, தமாகா ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here