வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவு

0
113

தூத்துக்குடி,ஏப்.10:

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14 ம்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது. இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here