சீன வைரஸால் பாதிப்பு – நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி ரூ.2000 – தமிழக அரசு அரசாணை

0
23
tamil nadu

தமிழகத்தில் குறிப்பாக சித்திரை, வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி உள்ளிட்ட தமிழ்மாதங்களில் கோவில்விழாக்கள், கலாச்சார விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த விழாக்கள் மூலம் நாட்டுப்புற கலைஞர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இதே சமயத்தில் சீன வைரஸ் தாக்கத்தால் உலகமே தத்தளிக்கும் நிலைக்கு சென்றது. அதனால் விழாக்கள் எதுவும் நடத்தப்படவில்லை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர். விழாக்கள் நடத்தப்படும் காலங்கள் முழுவதும் வீணானது. அதை நம்பி பிழைப்பு நடத்தி வரும் ஏராளமான நாட்டுபுற கலைஞர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை என்றாலும் சமாளித்தார்கள்.

இந்தாண்டாவது தங்களின் வழக்கமான பணியை தொடங்களாம் என நினைத்திருந்த அக்கலைஞர்களுக்கு மேலும் இடி விழுந்தாற்போல் தகவல்களை அவர்களை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கிரா கோவில்களில் நடத்தப்படும் விழாக்கள் முதல் இவர்கள் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியும் நடத்தமுடியாத அளவிற்கு மீண்டும் சீன வைரஸ் சிறகு விரித்து நிற்கிறது. தற்போது உலக அளவில் அதிகம் பரவிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேறு வழியில்லாமல் மக்களிடையே கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் பதற்றமான நாட்டுப்புற கலைஞர்கள், எங்களின் வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் தார்ருங்கள். நாங்கள் இந்த தொழிலைவிட்டு சென்றுவிட்டால் தமிழக நாட்டுப்புற கலைகள் படிப்படியாக குறைந்துபோகும் என எச்சரிக்கை கலந்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here