புதுக்கோட்டையில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

0
11
tmb

சாயர்புரம், ஏப்.21-

தூத்துக்குடி டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் டி.டி. டி. ஏ. பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இம் முகாமினை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மற்றும் டி.எம்.பி. பவுண்டேஷன் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தின. கொரோனா விதிகளுக்குட்பட்டு நடந்த இம்முகாமில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண்ணாடி, கண்புரை நோய் உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை டிஎம்பி கிளை மேலாளர் கணேஷ் பாண்டியன் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here