நாசரேத்,ஏப்.29:
நாசரேத் பேரூரா ட்சிப் பகுதியில் கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நிலமைக்கு தக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாசரேத் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாசரேத் மற்றும் அதனைச் சுற் றியுள்ளப் பகுதிகளில் தற்போது கொரோனா பரவல் தீவிரம் அடை ந்து வருகிறது.ஆனால் இது குறி த்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் நாசரேத்பேரூராட்சி நிர்வா கமும், சுகாதாரத் துறையும் இருக் கிறது. ஆனால் நாசரேத்திலுள்ள பலவீடுகளில் இரண்டுக்கும் மேற் பட்ட நபர்கள் தொற்றால் அவதிப் பட்டு வருகின்றனர்.பல பேர் மர ணத்தின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளதாக கூறுகின்றனர்.

எனவே மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நாசரேத் பேரூராட் சிக்குட்பட்ட தெருக்கள், வீடுகள் அனைத்திலும் சோதனையிட்டு பெருந்தொற்று உள்ளவர்களக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என நாசரேத் வட்டார பொதுமக்கள் விரும்புகின்றனர்.