தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ-மாணவி சாதனை – மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அசத்தினர்

0
270
srivai

தூத்துக்குடி:

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவியர் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நீச்சல் போட்டிகள் தூத்துக்குடி நீச்சல் அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் இறுதியில், தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி அனன்யா 50மீட்டர் பிரஷ் ஸ்டோக், 100மீட்டர் பிரிஸ்டைல் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் அபய்கிருஷ்ணா 50மீட்டர் பட்டர்பிளை ஸ்டோக், 50மீட்டர் பிரிஸ்டைல் ஆகிய பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள மாணவி அனன்யா, மாணவர் அபய்கிருஷ்ணா, நீச்சல் பயிற்சியாளர் ஆகியோரை பள்ளி தாளாளர் கிங்ஸ்டன், பள்ளி முதல்வர் ஜூலியா மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றுள்ள அபய்கிருஷ்ணா, அனன்யா இருவரும் அண்ணன், தங்கை ஆவர். இவர்களின் தாயார் ஹேமா தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here