மக்கள் ஒத்துழைப்பால் கோவிட் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா

0
101
mamtha

கோல்கட்டா: மக்கள் ஒத்துழைப்பால் கோவிட் பாதிப்பு மேற்குவங்கத்தில் பாதியாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. ஆனால், மேற்குவங்கத்தில் சில கட்டுப்பாடுகளை மட்டுமே அமல்படுத்தினோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கோவிட் பரவல் பாதியாக குறைந்துள்ளது. மாநில அரசால் இதுவரை 1.40 கோடி கோவிட் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. உணவகங்களின் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்களை திறக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here