இருசக்கர வாகனத்தில் தானும், தனது 5வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (11.01.2020) தூத்துக்குடி பீச் ரோட்டில் வந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வரும் விவேக் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தானும் ஹெல்மெட் அணிந்து, தனது 5வயது மகனான யு.கே.ஜி படிக்கும் ராவன் எஸ் குமார் என்பவருக்கும் ஜீனியர் ஹெல்மெட் அணிவித்து இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்றதை பார்த்திருக்கிறார்.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் சட்டத்தை மதித்தும் தானும் ஹெல்மெட் அணிந்தும், தன்னுடைய மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்து சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
அதன் பொருட்டு அவரை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கும், 5வயது சிறுவனுக்கும் தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரேமா பரிசுப் பொருள் வழங்கினார்.