தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணி தொடக்கம்

0
13
tmb

தூத்துக்குடி,ஜூன்.5:

தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி திருவிக நகர் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வஉசி பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சமுக பொறுப்பு நிதி 10.82 லட்சம் மதிப்பில் வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் திட்டத்தின் கீழ் சுமார் 2000 மரக்கன்றுகள் அமைக்கும் திட்டத்தினை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்களை கனிமொழி எம்.பி வழங்கினார். மேலும், இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்கள் விற்பனை செய்யும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஷரண்யா அறி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி, நகர் நல அலுவலர் வித்யா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, முக்கிய பிரமுகர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here