தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.தி.மு.க சத்யா – துணைத் தலைவர் அ.தி.மு.க வக்கீல் செல்வக்குமார்

0
465
admk news

தூத்துக்குடி:11

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்யா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து 4வது முறையாக இந்த பதவியை அதிமுக கைப்பற்றியிருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30ம் தேதிகளில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 17வார்டுகளை கொண்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் நடைபெற்றது.

இதில், அதிமுக சார்பில் 5வது வார்டு உறுப்பினரான சத்யாவும், திமுக சார்பில் 15வது வார்டு உறுப்பினரான பிரம்மசக்தியும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 17வார்டுகளில் அதிமுகவினர் 12இடங்களிலும், திமுகவினர் 5இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர்.

தேர்தலின்முடிவில் அதிமுகவை சேர்ந்த சத்யா 12வாக்குகள் பெற்று மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக வேட்பாளர் பிரம்மசக்தி 5வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யாவிற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவராகியுள்ள சத்யா, புதூர் ஒன்றியம் எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர். சத்யாவின் தந்தை ராமச்சந்திரன் மாவட்ட அதிமுக விவசாய அணி இணைச்செயலாளராகவும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

வெற்றிபெற்ற சத்யா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்ராஜூ, முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

துணைத்தலைவர் பதவியையும் கைப்பற்றியது அ.தி.மு.க !

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 10வது வார்டு உறுப்பினர் வக்கீல் செல்வகுமாரும், திமுகவை சேர்ந்த 9வது வார்டு உறுப்பினர் கோரம்பள்ளம் அருண்குமாரும் போட்டியிட்டனர். இதில், செல்வக்குமார் 12வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அருண்குமார் 5வாக்குகள் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here