செப்.,15க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

0
267
cort

புதுடில்லி: தமிழகத்தில் நடத்தப்டாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை , செப்.,15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சி ,செங்கல்பட்டு, திருப்பத்தூர்.,வேலூர். ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்டு போன நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்.15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாதது ஏற்புடையது அல்ல என உத்தரவு பிறப்பித்தது.

அரசு தரப்பில் கோரப்பட்ட 6 மாதம் அவகாசம் அளிக்கவும் கோர்ட் மறுத்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here