தூத்துக்குடி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.28.50 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் – ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கியது

0
21
sterlite news

பல்வேறு கோஷங்களுக்கு நடுவே சுமார் 29 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்.

தூத்துக்குடியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனம், தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழகம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்திற்கே உதவியது. சுற்றுசூழல் உள்ளிட்ட காரணம் காட்டப்பட்ட தேர்தல் அரசியலில், தற்போது அந்த ஆலை இயக்கப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கொரோனா ஆபத்து காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும்வகையில், நீதிமன்ற அனுமதியுடன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

ஏற்கனவே அந்நிர்வாகம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், தற்போது மிகவும் அவசியமாக இருக்கிற மருத்துவ உபகரணங்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி நேற்று டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கியது.

தூத்துக்குடி தலைமை மருத்துவமனைக்கு ஏற்கனவே பல்வேறு உபகரணங்கள் வழங்கியிருக்கிற நிலையில், தற்போது மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம்,ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறது.

இது குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் டாக்டர்கள், மக்களின் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பல மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் டாக்டர்கள் தினத்தில், அவர்களை கவுரவிக்கும் வகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம்,கோவில்பட்டி,ஸ்ரீவைகுண்டம்,ஓட்டபிடாரம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளுக்கும் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 7 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள்,சிரஞ்ச்பம்புகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து இதுவரை 1418.94 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று 953 ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here