மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளையும் கற்றுக் கொடுக்க அமைச்சர் உத்தரவிட வேண்டும்

0
11
ponmudi news

கல்லூரியில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் நடத்தாமல் பொது விஷயங்கள், சமூகநீதி,பெண்களின் உரிமைகள் போன்றவற்றையும், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை எழும்பூர் எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் பேசியிருக்கிறார்.

அமைச்சர் பேசும்போது, ’’பெண்களுக்கு சம உரிமை வழங்க்கபட்ட வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. கல்வி வளர்ச்சிக்காக திருமண உதவித் திட்டத்தை அறிவித்தவர் கலைஞர். தற்போது கலைஞரின் வழியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும், பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது எம்.கே.தியாகராஜபாகவதர் குடும்பத்துக்கு உதவிகள் செய்து வருபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கல்லூரிகளில், ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது, பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் நடத்தாமல், பொது விஷயங்களையும், சமூக நீதி, பெண்களுக்குகான உரிமைகள் போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

அமைச்சர் கூற்றுப்படி மாணவர்கள் பொது விஷயங்களையும், சமூக நீதி மற்றும் பெண் உரிமைகள் பற்றி அறிந்தவர்களாக வளர்க்கப்பட வேண்டியது அவசியமானதே. அத்துடன் சுய ஒழுக்கமானவர்களாக மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பதும் மிக அவசியமானதே. கடந்த காலங்களில் பள்ளிகளில் இருந்த ஒழுக்க நெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அமைச்சரும், ஆசிரியர்களும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here