நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி – புதிய தமிழகம் கட்சி தீர்மானம்

0
19
dr.krishnasamy

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர்கள் கருப்பசாமி, முருகன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் அய்யர், மாநில மகளிரணி செயலாளர் சரஸ்வதி, மாநில துணை அமைப்புசெயலாளர்கள் ராமராஜ், லிங்கராஜ், கிருபைராஜ், மாநில திட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திட மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது, அனைத்து பகுதிகளிலும் கட்சியை பலப்படுத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் செல்லத்துரை, பெருமாள், ஹென்றிமாடசாமி, பொன்அமிர்தம், ரவி, சிவசெல்வம், அதிக்குமார், முருகையா, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here