நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

0
18
nazareth news

நாசரேத்,ஜூலை.21:

பெருந்தலைவர் காமராஜர் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் கராத்தே செல்வின் நாடார் துணைவி யார் வயலா செல்வின் மற்றும் கழக பொதுச் செயலாளர் மின்னல் அந்தோணி நாடார் ஆலோசனையின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 250 பேர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஐஜி நாடார் மாவட்ட துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறி ஞரணி கிருபாகரன், கபடி கந்தன், நகர திமுக செயலாளர் ரவி செல்வக்கு மார், அவைத்தலைவர் அருள்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல், அலெக்ஸ் பிரிட்டோ, அன்பு, மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன்,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல், மாவட்ட தொழில் நுட்ப அமைப்பாளர் பேரின்பராஜ். ஆழ்வை ஒன்றிய அவைத்தலைவர் சௌந்தர்ராஜன், ஒன்றிய பிரதிநிதிகள் ஞானராஜ், தாமரைச்செல்வன், வார்டு செயலாளர்கள் அதிசயம், மணி உடையார், மார்க்,சரவணன், கருத்தையா,ஸ்டீபன்,ஹரிஸ் ரவி மனோகரன். முத்துசாமி, டேனியல், நகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பெஸ்டின்குமார், ராஜேந்திரன், மோகன்,

காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட தொழிற் சங்க தலைவர் ஜெயபால், தகவல் தொழில்நுட்ப தலைவர் சாம், ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங், ஆழ்வை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமார், துணைச்செயலாளர் சகாயராஜ், ஆழ்வை ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்ரீராம், துணைத்தலைவர் கிங்ஸ்டன்,

ஆழ்வை ஒன்றிய தொழிற் சங்க தலைவர் ஈஸ்டர், துணைத் தலைவர் பெருமாள், உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசகன் டேனியல் மற்றும் சின்னத்துரை, மோசஸ், புஷ்பராஜ், திருச்செந்தூர் இளைஞரணி செயலாளர் ஜெயசிங், துணைச்செயலாளர் சுயம்புலிங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் அஜய் பாரதி, துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள்,திமுக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here