தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் பொங்கல் தின விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் 6வது ஆண்டு பொங்கல் தின விளையாட்டு மற்றும் கலைநிகழச்சி போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கயிறு இழுக்கும்போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.
கோவில்பட்டி காவலர் குடியிருப்பு காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒருங்கிணைந்து 21வது ஆண்டு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான விழா நேற்றும் (14.01.2020) இன்றும் (15.01.2020) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுதேசன் வரவேற்புரையாற்றினார். கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் ஐயப்பன், கோவில்பட்டி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மொ;சி ரமணி பாய், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுகாதேவ, காவல்துறை உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், கோவில்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்