தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1908 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2047 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.
சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ’’தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 685 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 1905 பேரும் வெளிநாடு சென்று, வந்தவர்கள் சேர்த்து 1908 பேருக்கு தோற்று உறுதியாகியிருக்கிறது. மேலும் தற்போது வரை 3 கோடியே 78 லட்சத்து 95 ஆயிரத்து 700 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று கொரோனா தொற்று உறுதியானவர்கள் 1104 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் இதன்மூலம் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 98 ஆயிரத்து 681, பெண்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 733 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2047 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதை தொடர்ந்து குணமடைந்து வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 11 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பில் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது’’. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.