ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் மூலவர் அவதார தினத்தை முன்னிட்டு கருடசேவை

0
79
srivaikundam kovil

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் மூலவர் அவதார தினத்தை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் சுவாமி கோயிலில் மூலவர் அவதார தினம் விழாவை முன்னிட்டு இரவு கருடசேவை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 8 மணிக்கு மூலவர் சுவாமி வைகுண்டநாதனுக்கு பால் திருமஞ்சனம், தீபாராதணை நடந்தது.

காலை11 மணிக்கு உற்சவர் ஸ்ரீகள்ளப்பிரான் சுவாமி, தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கமசகிரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர், சிறப்பு திருமஞ்சனம் நாலாயிர திவ்விய பிரபந்த சேவை கோஷ்டி நடைபெற்றது. ஸ்ரீ கள்ளப்பிரான் சுவாமி எழுந்தருளி கருடவாகனத்தில் அமர்ந்தும் குடவரை பெருவாயிலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வீதிஉலா நடைபெற்றது.

இதில், கோயில் நிர்வாக அதிகாரி கணேஷ்குமார், ஆய்வாளர் நம்பி, ஸ்லத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், அர்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன்,ராமானுசம், சீனு மற்றும் உபயதாரர் வக்கில் சந்திரசேகர் உட்பட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here