பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா..!யோகா, சிலம்ப பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்..!!

0
366
srivai kundam news

பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா, கண்கணவர் கலைநிகழ்ச்சிகளான யோகா, சிலம்பத்துடன் கோலாகலமாக நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான விளையாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் பெல்சியா ரோஸி தலைமை வகித்தார். பேட்மாநகரம் சுகாதார ஆய்வாளர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், கோ-கோ, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளும் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 6ம் வகுப்பு மாணவர் மிஷாலும், 200மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 7ம் வகுப்பு மாணர் ஆனந்த்தும், 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8ம் வகுப்பு மாணவர் சிவபிரவீனும் முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச்சென்றனர். கைப்பந்து போட்டியில் பச்சை நிற அணியும், கோ-கோ போட்டியில் ஊதா நிற அணியினரும் வெற்றி பெற்றனர். அனைத்து வகையான விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்று அதிக புள்ளிகளை பெற்ற பள்ளியின் பச்சை நிற அணி ‘’ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்-2020’’ பரிசு கோப்பையை தட்டிச்சென்றனர்.

போட்டிகளைத்தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள், ஆசிரியை-ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், எம்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலேயே பயின்று, தற்போது பேட்மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர்.இராம்சர்மா சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாணவ, மாணவியர்களின் பாரம்பரியம்மிக்க கண்கவர் கலைநிகழ்ச்சிகளாக சிலம்பம், யோகா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பெல்சியா ரோஸி தலைமையில் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here