கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

0
71
kvp news

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் 68 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புனித நீர் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் சுவாமி , அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை உடன், பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையடுத்து சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here