இன்பன் உதயநிதி, ஸ்பெயின் பயணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழியனுப்பி வைத்தார்

0
7
news

சென்னை: இந்தியாவின் ஐ-லீக் கால்பந்தாட்ட குழுவில், நெரோகா எனப்படும் மணிப்பூர் அணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பேரன் இன்பன் உதயநிதி, போட்டிகளில் பங்கேற்க நேற்று (செப்., 14) அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் புறப்பட்டார். அவரை முதல்வர் நேரில் வழியனுப்பி வைத்தார்.

சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதல்வரின் பேரனுமான இன்பன் உதயநிதி சென்னையில் உள்ள “மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்” சேர்ந்து கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த அகாடமி புனே, மணிப்பூர் உள்ளிட்ட கால்பந்தாட்ட சங்கங்களின் கீழ் இணைப்பு பெற்றது. அதன் மூலம் இன்பநிதி மணிப்பூரின் நெரோகா அணியில் தேர்வானார். எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்து ஆடுபவர் இன்பன் என அந்த அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அணியில் உள்ள மிக இளம் வயது வீரர் இவர்.

இந்நிலையில், நெரோகா அணி ஸ்பெயினில் நடக்கின்ற கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது. அதற்காக இன்பன் உதயநிதி நேற்று அதிகாலை ஸ்பெயின் புறப்பட்டார். அவரை உதயநிதி, கிருத்திகா உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையம் வந்து நேரில் வழியனுப்பி வைத்தனர். அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here