’’மூக்குப்பீறியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி வேண்டும்” எம்.எல்.ஏ அனிதாவிடம் கேட்கிறார் பஞ்.தலைவர்

0
607
nazareth

நாசரேத்,பிப்.02:நாசரேத்அருகிலுள்ள மூக்குப்பீறியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி தொகுதி வளர்ச்சி நிதியில் கட்ட நிதி ஒதுக்குமாறு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இடம் மூக்குப்பீறி ஊராட்சிமன்றத் தலை வர் கமலா கலையரசு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

’’தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்குப்பீறி ஊராட்சி 3 ஆயிரத்து ஐநூறு மக்கள் தொகையை கொண்டு விளங்குகிறது.மூக்குப் பீறி ஊராட்சி வடக்குப்பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு போதுமான கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இல்லாததினால் பொது மக்க ளுக்கு சீராக குடிநீர் வழங்க முடியவில்லை.

ஆகவே புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து சீராககுடிதண்ணீர் வழங்கிடும் பொருட்டு 26.01.2020 அன்று நிறைவேற்றப்பட்ட கிராம சபை தீர்மானம் எண் 19 ன்படியும்,27.01.2020 அன்று நிறைவேற்றப்பட்ட மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் தீர்மானம் 10 ன்படியும்,தாங்கள் தங்களது தொகுதி வளர்ச்சி நிதி யில் இருந்து மூக்குப்பீறி ஊராட்சிக்கு குடிநீர்திட்டப் பணிகளை நிறைவேற்றித்தரும் படி கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here