ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா !

0
160
srivaikundam

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் கலைக்கல்லூரியின் முன்னாள் இணைப் பேராசிரியர் சேதுராமன் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் முத்தையா, கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் சண்முகநாதன், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தலைவர் தியாகச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன் வரவேற்றார்.

விழாவில், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பாவெங்கடாச்சாரி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு 80மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில், பள்ளியின் முன்னாள் எழுத்தர் திருமலைநம்பி, ஆசிரியை, ஆசியர்கள் முத்துலெட்சுமி, ஜெயமுருகன், சௌந்திரராஜன், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் முத்தையா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here