நாசரேத் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

0
15
nazareth

நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா!

நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அரிமா புஷ்பராஜ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார்.முதல்வர் நன்றி கூறினார்.

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன்சாலமோன் தேசியகொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு நம் முன்னவர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியர் அருள்ராஜ் சுதந்திரச் செய்தியை வழங்கினார்.

பள்ளி மாணவர்கள் மாறுவேட போட்டியிட்டு வந்தனர். பள்ளி குழந்தைகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் பள்ளி துணைமுதல்வர் மகிலா சரவணன் நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். பிறகு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தேசிய கீதம் முழங்க சுதந்திர தினவிழா இனிதே நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here