நாசரேத் அருகே அகப்பைகுளம் றி.என்.டி.றி.ஏ. துவக்கப்பள்ளி ஆண்டு விழா

0
93
nazareth

நாசரேத் அருகிலுள்ள அகப்பைகுளம் றி.என்.டி.றி.ஏ. துவக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளித்தாளாளர் குருவானவர் ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமை தாங்கி ஜெபம் செய்து தொடக்கி வைத்தார் தலைமையாசிரியர் செல்வக்குமார் வரவேற்றுபேசி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளியின் பழையமாணவர் சங்கத்தலைவர் பொன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புவிருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த டாக்டர் மேஷாக்கிருபாகரன் மற்றும் டாக்டர் செல்லம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாசரேத்-திருமறையூர் மனவளர்ச்சிகுன்றிய பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது.பள்ளிமாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.முடிவில் உபதேசி யார் அதிசயம் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here