ஸ்ரீவைகுண்டம் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

0
30
srivai

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராமன் வரவேற்றார். பள்ளி தாளாளர் பால்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து வரலாற்று ஆசிரியர் ரத்தினசாமி, மாணவியர்கள் உமா, ரோஷன்சுல்தானா எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் உடற்கல்வி ஆசிரியர் முருகன் தலைமையில் பிரமீடு வடிவமைத்தல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில், ஆசிரியை-ஆசிரியர்கள் சண்முகவேல், காசிராணி, மணிகண்டன், கவிதா, செல்வப்பிரியா, செல்லத்தாய், எஸ்தர், தேவி, மாணவ-, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி முதல்வர் பெல்சியா ரோஸி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசுப்பிரமணியன தேசிய கொடி ஏற்றி வைத்தார். பள்ளி முதுகலை ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றார். டி.வி.எம் சேவாபாலம் நிறுவனர் பாலம் இருளப்பன் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

பேட்துரைச்சாமிபுரம் காமராஜர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை அமுதா தலைமை வகித்தார். காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில், அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் கிளாராஅமுதராணி தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சுப்பையா, கல்வி குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் வார்டு உறுப்பினர் ராமலெட்சுமி, ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், பட்டதாரி ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here