விபத்தில் உயிர் நீத்த முப்படை தளபதிக்கு தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் அஞ்சலி

0
144
viyaparigal

தூத்துக்குடி, டிச.11:

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த முப்படை தளபதிக்கு தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத் மற்றும் அவரோடு பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தனர். உயிர் நீத்த முப்படை தளபதி மற்றும் ராணுவத்தினர்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில், சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ் உள்ளிட்டவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

இதில், சங்க துணைசெயலாளர் செல்வசேகர், தணிக்கையாளர் முத்துபாலகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர்கள் துரைச்சாமி, ஜோசப், கதிரேசன் நிர்வாகிகள் எட்வர்ட், தர்மராஜ், பட்டுராஜ், செல்வக்குமார், ராஜலிங்கம், ஜெயராமர், உத்திரபாண்டி மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here