பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் – பாஜக கோரிக்கை

0
136
bjp news

பாஜகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்வக்கனி மாவீரப்பாண்டியன் தலைமையில் பாஜவினர் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘’தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 44, 45 ஆகிய வார்டுகளில் (பிரையண்ட் நகர் 1 முதல் 12 வது தெரு வரை) சாலை பணிகளை துரிதபடுத்தி விரைவாக முடித்து தரவேண்டும். போக்குவரத்திற்கு சாலைகளை சீரமைத்து தந்து விபத்துகளை தடுத்திட வேண்டும்.

மேலும் பிரையண்ட் நகர் 1வது தெரு மத்தி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை (கடை எண் : 9953,) உடனடியாக அகற்றிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வக்கனி மாவீரப்பாண்டியனுடன் முன்னாள் இராணுவத்தினர் பிரிவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஹரிஹரன், சமூக ஆர்வலரும் , பத்திரிக்கையாளருமான பாஜக பிரமுகருமான மாவீரப்பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.

பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய மனுவை கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here