இலவசமாக வழங்கிய அனமின்நிலைய சாம்பல் நிறுத்தம் – செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

0
60
thermal news

அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, எரிந்த பிறகு கிடைக்கும் உலர் சாம்பலாக மிஞ்சுகிறது. அதை, சிமெண்ட் தயாரிப்பதற்கும் சமீபகாலமாக உலர் சாம்பல் செங்கல் மற்றும் ஹாலாபிளாக் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு முந்தைய காலங்களில் உலர் சாம்பலை தேவைப்படுவோர் எடுத்து கொள்ளட்டும் என்கிற நிலை இருந்து வந்தது. அது முழுவதையும் பயன்படுத்துவோருக்கு 20 சதவீதம் இலவசமாகவும் மற்றவை விலைக்கும் விற்கப்பட்டது. அந்த வகையில் உலர் சாம்பல் செங்கல் மற்றும் ஹாலாபிளாக் தயாரிப்பாளர்கள் பயனடைந்து வந்தார்கள்.

ஆனால் தற்போது 20 சதவீதம் இலவசமாக வழங்குவதை நிறுத்திவிட்டு முழுவதையும் ஏலத்தில் விட மத்திய வனத்துறை மற்றும் எரிசக்திதுறை முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை உலர் சாம்பல் செங்கல் மற்றும் ஹாலாபிளாக் உரிமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். மேலும் பழையபடி 20 சதவீதம் உலர் சாம்பலை இலவசமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று தென் மண்டல உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் சந்தித்தனர். எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.சசிதர் பேசும்போது, ‘’1999 முதல் அனல்நிலையங்களில் இருந்து வாங்கும்போது 20 சதவீதம் இலவசமாக தந்து வந்தார்கள். ஆனால் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியான உத்தரவில் அவற்றை ஏலத்தில்தான் விடமுடியும் என்றும் இலவசமாக வழங்க முடியாது என்றும் அறிவித்திருக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள 20 ஆயிரம் நிறுவனங்கள் பாதிக்கபடும் சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் நிறுவனங்கள் இருக்கிறது. ஏற்கனவே எங்களுக்கு வழங்குபட்டு வரும் அளவில் 40 லிருந்து 45 சதவீதம் கூடுதல் தேவை இருந்து வருகிறது.

இதற்கிடையே 20 சதவீதத்தையும் இழக்கும்போது மேலும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது போதாதென்று இதுவரை 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டியை 12 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் எங்களின் ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது.

இந்த தொழிலில் நேரடியாக உள்ள 20 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக உள்ள 60 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

அரசு நிர்வாகம் மூலம் இதெல்லாம் பிரச்னை என்றால், உற்பத்தியாளர்க்குள்ளும் பிரச்னை இருக்கிறது. தொழில் போட்டியில் சுட்ட செங்கலை விட சிலர் குறைவான விலை வைத்து விற்கிறார்கள். அதனால் இதில் நஷ்டம் ஏற்படுகிறது. இனிமேல் தமிழகம் முழுவதும் இந்த செங்கலின் விலை ஒரே மாதிரி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் சங்க மாநில தலைவர் ரவி, மாநில பொருளாளர் அருள்ராஜா, தூத்துக்குடி மண்டல செயலாளர் அரவிந்த், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here