கல்வி, வேலைவாய்ப்பிற்காக வ.உ.சிதம்பரம் கல்லூரி, இந்திய தொழில் கூட்டமைப்பு இடையே ஒப்பந்தம்

0
13
voc collage

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, ஏ.பி.சி. வீரபாகு அவர்களால் 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி பல்கலைகழக மானிய குழுவால் 12(b) மற்றும் 2(f) அங்கீகாரம் பெற்றது. மேலும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தோடு இணைக்கபெற்று முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது.

வ.உ.சிதம்பரம் கல்வி கழகத்தால் நிர்வகிக்கபட்டு வரும் இக்கல்லூரிக்கு ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் செயலராகவும், வீரபாகு முதல்வராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்கள். 1951 ஆண்டு முதல் தரமான கல்வியை சேவையாக வழங்குவதில் முன்னிலை வகிப்பதோடு தேசிய அளவில் சிறந்த கல்லூரியாகவும் வ.உ.சிதம்பரம் கல்லூரி திகழ்கிறது.

வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மற்றும் யங் இந்தியன்ஸ் (Yi) தூத்துக்குடி பிரிவு தலைவர் செல்வி. சில்வியா ஜான் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், செயல்பாட்டு குழுக்களின் மூலம் மாணவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தி, தேசத்திற்கு அர்ப்பணிக்கும் பரந்த நோக்கத்துடன் பணியாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவதாகும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மாணவர்கள் தலைமை பண்புகளான சுய வளர்ச்சி, திறன் மேம்பாடு, சமூக சேவை மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் வளர்ச்சியடைகின்றனர்.

யங் இந்தியன்ஸ் (Yi) தூத்துக்குடி பிரிவு இணைத்தலைவர் ராஜேஷ், யங் இந்தியன்ஸ் (Yi) தூத்துக்குடி பிரிவு செயற்குழு உறுப்பினர் ஜார்ஜ் பெரோஸ், சாலை பாதுகாப்பு தலைவர் தினேஷ், யங் இந்தியன்ஸ் (Yi) தூத்துக்குடி பிரிவு மற்றும் முனைவர் ஜே.ஆர்.ஐசக் பாலாசிங், வேலை வாய்ப்பு அதிகாரி – பொறுப்பு மற்றும் EDC ஒருங்கிணைப்பாளர், வ.உ.சிதம்பரம் கல்லூரி, சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here