குடும்பத் தகராறில் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தை கைது

0
119
idaiyarkadu

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையர்காடு, சம்படி காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அய்யப்பன் (42),கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா (32) என்ற மனைவியும், செல்வ நரேஷ் (11), முருகவேல் (9), மற்றும் செல்வகணேஷ் (6) ஆகிய மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அய்யப்பனுக்கும் அவரது மனைவி ரேகா ஆகிய இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் தனது குழந்தைகளான செல்வ நரேஷ், முருகவேல் மற்றும் செல்வ கணேஷ் ஆகிய 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரேகா அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here