மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர்கள் சாம்பியன் !

0
137
nazareth

நாசரேத் மார்ச் 06
நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தூத்துக்குடி திருநெல்வெலி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐ.டி.ஐ. களுக்கிடையேயான மண்டல விளையாட்டுப் போட்டி திருநெல்வேலி பேட்டை அரசினர் ஐ.டி.ஐ யில் வைத்து நடைபெற்றது. இதனை மண்டல இணை இயக்குநர் ராஜகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர் ஜெபக்குமார் 100மீ 200மீ மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதல் பரிசு பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். 800மீ ஓட்டப்பந்தயத்தில் ரேனியஸ் செல்வன் முதலிடத்தையும் உயரம் தாண்டுதலில் அபிஷேக் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். பின்னர் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருநெல்வெலி அரசினர் ஐ.டி.ஐ துணை இயக்குநர் செல்வக்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் அதிக புள்ளிகளைப் பெற்று நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. போட்டிகளின் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ யின் தாளாளர் பைசோன் ஞானராஜ்இ முதல்வர் ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here