8 மார்ச் 2020, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் மகளிர் தொழில்முனைவு மேம்பாடு திட்டமான சகி சார்பில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு சுய உதவி குழுக்களிலிருந்து 2500க்கும் அதிகமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், 2020 மார்ச் 7ம் தேதியன்று தாமிரா 1-ல் சர்வதேச பெண்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடியது. மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்டிய 8 சுய உதவி குழுக்கள் மற்றும் 10 வருவாய் உருவாக்க அமைப்புகளை (இன்கம் ஜெனரேட்டர்ஸ்) அடையாளம் கண்டு மற்றும் அவைகளுக்கு வெகுமதி தந்து கௌரவித்ததன் மூலம் சர்வதேச பெண்கள் தினத்தை ஸ்டெர்லைட் காப்பர் இந்நிகழ்வை இன்னும் சிறப்பாக்கியது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மிகச்சிறப்பான பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டமான (சிஎஸ்ஆர்) சகி அமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய பெண்கள் தின கொண்டாட்டத்தில் தூத்துக்குடியில் இயங்கிவரும் பல்வேறு சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 2500க்கும் அதிகமான பெண்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்களின் தேவைகளையும் மற்றும் சாத்தியத்திறனையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குகின்ற பல–முனை அணுகுமுறையை சகி செயல்திட்டம் பயன்படுத்துகிறது. பெண்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும், தொடர்ந்து நிலைக்கச் செய்யவும் ஆதாரவள மையங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் வழியாக சகி அமைப்பு பெண்களின் நலனுக்காக செயலாற்றி வருகிறது.

தையல், பைகள் தைத்தல், காளான் வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு மற்றும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு ஆகியவை மீதான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் தற்போது பெண்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. சகி அமைப்பின் பல்வேறு செயல்திட்டங்கள், 150க்கும் அதிகமான பெண்களுக்கு நிதிசார் முன்னேற்றம் மற்றும் சுய-சார்பு நிலையை உறுதிசெய்திருக்கிறது.

சிறப்பான வளர்ச்சியை எட்டியதற்காக உச்சி மாகாளி அம்மன் தாயகம் (தெற்குவீர பாண்டியபுரம்), சங்கமம் தாயகம் (ராஜாவின் கோவில்), சகி ஆப்பிள் தாயகம் (முத்தையாபுரம்), சகி வடமல்லி தாயகம் (முத்தையாபுரம்), கண்மணி சுய உதவி குழு சகி டிஎஸ்டி (அய்யனடைப்பு), ரோஜா சுய உதவி குழு டிஎஸ்டி (அய்யனடைப்பு), பெல் சிலப்பதிகாரம் சகி சுய உதவி குழு (நயினார்புரம்) மற்றும் பெல் தோழிகள் சகி பெண்கள் சுய உதவி குழு (மூன்றாம் மைல்) ஆகியவை சகியால் அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்ட சுய உதவி குழுக்களாகும்.

சுமதி டெய்லரிங் (சில்லநத்தம்), சீதாலட்சுமி டெய்லரிங் (நயினார்புரம்), அம்பிகா ஈஸ்வரி டெய்லரிங் (பண்டாரம்பட்டி), அண்ணபுஷ்மா டெய்லரிங் (பண்டாரம்பட்டி), சுமதி டெய்லரிங் (பண்டாரம்பட்டி), லட்சுமி தேனீக்கள் வளர்ப்பு (அய்யனடைப்பு), பி சோளங்கிளி தேனீக்கள் வளர்ப்பு (ராஜாவின் கோவில்), டி. விஜயா தேனீக்கள் வளர்ப்பு (ராஜாவின் கோவில்), கன்னியம்மாள் தேனீக்கள் வளர்ப்பு, ஆடைகள் தையலகம் (தெற்கு வீரபாண்டியபுரம்) மற்றும் எஸ். பெரிய பிராட்டி ஆடைகள் தையலகம் (ராஜாவின் கோவில்) ஆகியவை வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்ட, 2020ம் ஆண்டுக்கான வளர்ந்துவரும் வருவாய் உருவாக்கல் அமைப்புகளாகும்.
இந்நிகழ்வுக்கான தலைமை விருந்தினராக சென்டேனியல் டிஸ்ட்ரிக் கவர்னர் 2016-17, லயன் எஸ் சுதந்திரலட்சுமி, எம்ஜேஎஃப், கலந்துகொண்டார். அருணாச்சலா எக்ஸ்போர்ட்ஸ் & டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி. பி. ஜேக்லின், சுரபி அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான திருமதி ஹேமா முரளிதரன், இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்சஸ்-ன் இயக்குநர் டாக்டர். எல். கீதா ஆகியோர் கவுரவ சிறப்பு விருந்தினர்களாக இதில் பங்கேற்றனர்.

சகி செயல்திட்டத்தின் மீதான தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. பங்கஜ் குமார், “தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்களின் கனவுகள், பெரு விருப்பங்கள் மற்றும் சாத்தியத்திறனை அடையாளம் கண்டு கூர்மையாக்குவதன் மூலம் ஒரு வினையூக்கியாக செயல்படவேண்டும் என்பதே இச்செயல்திட்டத்தின் குறிக்கோளாகும். நிதிஆதரவு, மனிதவள ஆதாரம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சந்தைக்கு சரியான அணுகுவசதி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் தனது குறிக்கோளை சாதிக்க சகி முனைப்புடன் செயலாற்றுகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்கள் சுய சார்புள்ளவர்களாக, பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களாக ஆவதற்காக இதுபோல இன்னும் பல முனைப்பு திட்டங்களை தொடங்கி செயல்படுத்த நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.