பறவைகாய்ச்சல், கொரோனா எது வந்தாலும் சமாளிக்க கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

0
64
udumalai radhakrishanan

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கழுகுமலையில் ஆவின் பாலகத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அதன் பின்னர் துரைச்சாமி புரத்தில் மற்றும் கட்டாலங்குளத்தில் அரசு கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக கேரளா எல்லையில் 26 இடங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது,தமிழகத்தில் எந்த விதமான பிரச்சனை இல்லை,பறவைகாய்ச்சல், கொரோனா எது வந்தாலும் சமாளிக்க கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது. கோழி பண்ணைகள் அனைத்து தீவிர கண்காணிப்பில் உள்ளது,ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா போன்றே பறவை காய்ச்சலுக்கும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.இந்தாண்டு 43 கோடி செலவில் 108 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here