கொரோனா, பறவைக் காய்ச்சல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

0
79
minister udumalai

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது,வரும்முன் காப்போம் என்ற முறையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையில் 26 இடங்களில் கால்நடை மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை, கால்நடைத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி தொழில் மூலமாக பல ஆயிரம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். பல ஆயிரம் கோடி வருமானம் தமிழகம் பெற்று கொண்டு இருக்கிறது. கறிக்கோழி முட்டை சாப்படுவதால எவ்வித பிரச்சினையும் இல்லை என்று சுகாதாரத்துறை ‌ஆய்வின் மூலமாக தெரியபடுத்தப் பட்டுள்ளது.ஆகவே யாரூம் அச்சபட தேவையில்லை, கறிக்கோழி, முட்டை சாப்பிடலாம்.

கால்நடை மருத்துவ துறையில் ஏற்கனவே 650 பேர் மருத்துவர்கள் நியமனம் செய்ய பெற்றுள்ளனர். கால்நடை கிளை மற்றும் மருந்தகங்கள் அதிகளவில் திறக்கப்பட உள்ளதால் 200 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர், அரசு கேபிள் டிவிக்கு கூடுதலாக 10 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கப்பட உள்ளது.எங்கு எல்லாம் அரசு கேபிள் டிவி இல்லையோ அங்கு எல்லாம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செட்பாக்ஸ் வழங்கப்படும் என்றும், கொரோனா, பறவைக் காய்ச்சல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேவையற்ற வதந்திகளை பரப்பக் கூடாது.தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here