மாநில அளவிலான ஆண்-பெண் சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டி – அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்

0
29

சாயர்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்-பெண்களுக்கான சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். அனைத்து பிரிவிலும் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆண்கள்-பெண்களுக்கான 2021-22ம் ஆண்டுக்கான சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டி தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில், ஆண்கள் சப்-ஜுனியர் பிரிவில் சேலம் மாவட்டம் முதலிடமும், புதுக்கோட்டை மாவட்டம் 2வது இடமும், ஜுனியர் பிரிவில் சேலம் மாவட்டம் முதலிடமும், மயிலாடுதுறை மாவட்டம் 2வது இடமும், சீனியர் பிரிவில் சேலம் மாவட்டம் முதலிடமும், திருவள்ளுவர் மாவட்டம் 2வது இடமும் பெற்றது.

பெண்கள் பிரிவில் சப்-ஜீனியர் பிரிவில் சேலம் மாவட்டம் முதலிடமும், நாமக்கல் மாவட்டம் 2வது இடமும், ஜுனியர் பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடமும், மதுரை மாவட்டம் 2வது இடமும், சீனியர் பிரிவில் சேலம் மாவட்டம் முதலிடமும், திருநெல்வேலி மாவட்டம் 2வது இடமும் பெற்றது.

போட்டிகளைத்தொடர்ந்து, போட்டிகளுக்கு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க தலைவரும், சாயர்புரம் டாக்டர்.ஜி.யு.போப் இன்ஜினீயரிங் கல்லூரி தாளாளருமான ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், திருமண்டல மேல்நிலைப்பள்ளிகள்-ஆசிரியர் பயிற்சி நிறுவன மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்க செயலாளர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க துணைத்தலைவர்கள் பால்ராம், அசோக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

இதில், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, சுப்பிரமணியன், போப் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயரட்சகர், தலைமையாசிரியர் அகஸ்றின்,

சாயர்புரம் சேகர செயலாளர் அபிஷேகம், சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பாக்கியலெட்சுமி, திமுக பொறுப்பாளர் அறவாழி, சாயர்புரம் சேகர பொருளாளர் ஜாண்சன் பொன்சிங், சாயர்புரம் எல்.சி.எப். செயலாளர் ஆன்ட்டூஸ் அதிசயராஜ், பொருளாளர் அலெக்ஸ்சாண்டர், தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க பொருளாளர் ருத்ரமூர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்-வீராங்கனைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க செயலாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினரான ராஜேஷ் ரவிசந்தர், அசோக், நெல்சன் பொன்ராஜ், ஸ்ரீதர், நவராஜ் புல்கானின் டேனியல், பால்ராம், குணசேகர், தமிழரசன், செல்வின், பிரதீப், செண்பகமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் ஈஸ்டர், அலெக்ஸ் ஞானமுத்து, அற்புதராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here