தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வை கண்டு வியந்தனர்.!

0
32
st.marrys

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அரிய நிகழ்வான பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வை கண்டு வியந்தனர்.

பொதுவாக சூரியனால் ஏற்படும் ஒருபொருளின் நிழல் காலையில் அதிக நீளத்தோடு இருந்து, உச்சி நேரத்தில் குறைந்து, சூரியன் மறையும் வரை மீண்டும் நீளும் என்பது வழக்கமாகும். இதேநேரத்தில், ஒரு வருடத்தில் இரண்டுமுறை சூரியனால் ஏற்படும் நிழலை உச்சி நேரத்தில் காண இயலாது என்ற அரிய நிகழ்வும் நடக்கிறது.

இந்தநேரத்தில், ஒருபொருளின் நேர் மேலாக 90டிகிரி உச்சியில் சூரியன் வரும் நிகழ்வானது பூஜ்ய நிழல் தினம் எனப்படுகிறது. இந்த நிகழ்வு, நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் தெளிவாக காணப்பட்டது. தூத்துக்குடி மில்லர்புரம், செயின்ட்மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் இந்த அரிய நிகழ்வினை மாணவர்கள் செயல்விளக்க காட்சிகளுடன் கண்டு வியந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இதற்கான விளக்கவுரை நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியர் மரியஜோசப் அந்தோணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் அந்தோணி, மோகன் ஆகியோர் இந்த நிகழ்வின் அதிசயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அறிவியல் இயக்க பொறுப்பாளரான ஆசிரியர் அந்தோணி கூறியதாவது, இந்த வருடம் இந்த மாதத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்த நிகழ்வை காண முடியும். இதனை ஒவ்வொரு பகுதியிலும் துல்லியமாக பார்க்கலாம். இந்த நிகழ்வானது மதியம் 12.18க்கு ஏற்பட்டது. அப்போது சூரியனால் ஏற்பட்ட பொருளின் நிழல், நேர்குத்தாக கீழே விழுந்த காரணத்தால் தரையில் பொருளின் நிழல் தென்படவில்லை. இந்த நிகழ்வைவக் கொண்டு சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், அட்சரேகை அமைப்பை எளிதாக கண்டறிய முடியும். இதுபோன்ற அரிய நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை மீண்டும் நிகழவுள்ளது என்றார்.

இதில், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here