தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் பலி – பிரதமர் மோடி இரங்கல்

0
26
news

டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா தீனதயாளன். இவர் 83 வது சீனியர் மற்றும் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி சாலை மார்க்கமாக பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் பயணம் செய்த வாகனத்தின் மீது டிரக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் வீரர் விஷ்வா தீனதயாளன் பலியானார். அவரது உடல் இன்று தமிழகம் வந்து சேர்ந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்துவத்துடன் திகழ்ந்தார். மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் கவலையை பார்த்துக் கொண்டுள்ளேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன ஓம் சாந்தி” இவ்வாறு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here