”ரயில்வே தேர்வெழுத மாநிலம் தாண்டி மாநிலம் போகவேண்டுமாம்”

0
20
railway

ரயில்வேயில் நிலைய அதிகாரி உள்ளிட்ட 24 ஆயிரத்து 649 பணியிடங்களை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், இரண்டாம் நிலை தேர்வு மே 9ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வின் மையங்கள் குறித்த விபரத்தை, ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு மையச் சீட்டை பதிவிறக்கம் செய்த தேர்வர்கள், தங்களுக்கான தேர்வு மையங்கள் மிகத் தொலைவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பம் செய்த ஒருவருக்கு கர்நாடகா மாநிலம், உடுப்பி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தமிழக தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளன.

இது ஏழை, நடுத்தர குடும்பத்து தேர்வர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். அதுமட்டுமின்றி பெண் தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் பாதுகாப்பிற்காக, ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். மொழிபிரச்னையும் கூடுதல் சுமை என, தேர்வர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இது குறித்து, தமிழக அரசு தலையிட்டு, தமிழக தேர்வர்களுக்கு உள்ளூரிலேயே மையங்கள் ஒதுக்க, ரயில்வே வாரியத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here